• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோயில்

ByA.Tamilselvan

Sep 13, 2022

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கோயிலில் அடைகலம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பலர் வீடுகளை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இந்து கோயிலில் அடைக்கலம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலூசிஸ்தான் மாகாணத்தின் ஜலால்கான் என்ற கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் கோயிலில் வந்து தங்கி கொள்ளலாம் என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 300 முஸ்லிம்களுக்கு கோயிலில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு 3 வேளை உணவும் அளிக்கப்படுகிறது.