பெரம்பலூர் அருகே பூலாம்பாடியில் பொதுமக்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பூலாம்பாடி திமுக நகர செயலாளரும்,பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலெட்சுமி சேகர் தூண்டுதலின் பேரில் தனிநபர் ஒருவர், 70-ஆண்டுகாலமாக பொதுமக்களே பயன்படுத்திவந்த சாலையை மறிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பொதுமக்கள்100க்கும் மேற்பட்டோர் திடிரென சாலைமறியல் செய்தனர்.அரசடிக்காடு என்னும் காட்டுப்பகுதியில் குடியிருப்பவர்கள் பயன்படுத்திவந்தசாலையை தனிநபர் மலர் என்பவர் மறிப்பதாகவும், தட்டிக்கேட்பவர்களை தரக்குறைவாக பேசு தாக்குவதாகவும் மறியலில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு பூலாம்பாடி திமுக நகரசெயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான செல்வலட்சுமிசேகர் என்பவர் தூண்டுதலாக இருக்கிறார் என்பதும் மறியல் செய்த பொதுமக்களின் குற்றச்சாட்டு.சாலையை மறித்ததால் அரசடிக்காடு காட்டுகொட்டகையில் குடியிருக்கும் பொதுமக்கள் ஊருக்குள் வந்து செல்ல முடியவில்லை என்றும் விவசாயப்பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்ல முடியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு சாலை வசதி செய்துதரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல் நடைபெற்று வருகிறது.

 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)