

மதுரையில் நேற்று முன்தினம் ரயில்வே நிலையம் அருகே போடி லைன் யார்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த ரயில் பெட்டியானது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 9 பேர் உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தீ விபத்து நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் நிற்கும் இன்றும் இரு நாட்களாக சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து IRCTC நிறுவன உதவியாளரான உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த தீபக் (23), சமையல் உதவியாளரான பிரகாஷ் ரஷ்தோகி (47) , உதவியாளரான சுபம் கஷ்யப்(19), பேசின் சுற்றுலா நிறுவனத்தில் வழிகாட்டி நரேந்திரகுமார் (61), சமையலர் ஹர்திக் சஹெனே ஆகிய 5 பேரும் மதுரை மாவட்ட 6ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
