

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் நேற்று இரவு திடீரென தீப்பற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு கருவேலம்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற் பாலையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தனர். அப்போது அந்த மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது உடனடியாக அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேறினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து சென்ற திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் நூற்பாலையில் ஏற்பட்ட தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.