

புளியங்குடி காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மது அருந்தியவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளியங்குடி வல்லப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (45) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தோட்டத்தில் மது அருந்தி உள்ளார் மது போதையில் தொடர்ந்து எழுந்திருக்காதால் சக நண்பர்கள் எழுப்பி பார்த்தனர். அப்போது மாரியப்பன் இறந்ததை தெரிந்ததும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பெயரில் புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளார் இறந்த மாரியப்பனுக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் மது போதையில் மரணம் அடைந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
