
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்துள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.
பாறைபத்தி, நிலையூர், விராதனூhர். விரகனூர், ஏற்குடி அச்சம்பத்து, பெரிய ஆலங்குளம், புளியங்குளம், நெடுமதுரை பகுதிகளில் வேளாண் விற்பனை துறை மூலம் இப்பணி நிறைவேற்றப்படும். தேவைப்படும் விவசாயிகள் 81486 65738ல் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.