• Mon. May 6th, 2024

கண்கவர் நவீன ரக குளியல் தொட்டி!

Byஜெ.துரை

Jun 25, 2023

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாபெரும் இன்டீரியர் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஸ்பா குளியல் தொட்டி விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த குளிர் தொட்டியானது மிகவும் நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் குளிப்பது முதல் நான்கு பேர் வரை குளிக்கும் தொட்டி வரை வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்தொட்டியில் நவீன ரக தண்ணீர் பாய்ச்சல்கள் உள்ளதால் உடலில் தண்ணீரால் அழுத்தத்தைக் கொடுத்து புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொட்டியை கண்காட்சிக்கு வரும் அனைவரும் வியப்புடன் பார்த்து அதன் பலன்களை கேட்டு தெரிந்து கொண்டு அதை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்த குளியல் தொட்டி பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *