

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 4 வது இந்திய அபகஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி இந்திய அபகஸ் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
இதில் இந்திய அபகஸ் நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பஷீர் அகமது வரவேற்புரையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உருது அகடமியின் துனைத் தலைவர்கள் நைமூர் ரகுமான், இதயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி இந்தியாவில் உள்ள அபகஸ் மாணவர்கள் இதில் பங்கேற்று அபகஸ் போட்டி நடைபெற்று கணித பயிற்ச்சில் சிற்றப்பாக வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், பதக்கங்களும் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
