• Fri. May 3rd, 2024

இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பு ..! முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆவேசம்..,

போதைப்பொருளை தடுக்க அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருட்களால் பாதிப்பு. எடப்பாடியார் நடத்திய போராட்டத்தால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.

ஐக்கிய நாட்டு சபையில் 1987 ஆண்டில், உலக நாடுகள் ஒரு மனதாக எடுத்த தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் போதை பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

 இந்நாளில் உலக நாடுகளின் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு அவசியத்தை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தலைகீழாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து இளைஞர் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

காவல்துறை மூலம் 2.0,3.0, 4.0 என்று பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல் முறையில் பயன் அளிக்கவில்லை. செயல் வடிவம் கேள்விக்குறியாக உள்ளது.

தென்கடலோர பகுதிகளில் உள்ள ராமேஸ்வரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது, மத்திய போதை பொருள் கண்காணிப்பு பிரிவு கண்டுபிடித்தது. ஆனால் அந்த உண்மை விவரம் வெளியே வரவில்லை.

உலக வர்த்தகத்தில் சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை ஆண்டிற்கு 5 லட்சம் கோடி என்ற அதிர்ச்சி தகவல் நமக்கு கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், குடும்பப் பிரச்சனை, பொருளாதர சீரழிவு என சர்வதேச அளவில் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போதை பொருள் விழிப்புணர்வில் 100 சகவீதம் அரசு தோல்வி அடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20,014 வழக்குகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25,721 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்பதற்கு சாட்சியாக உள்ளது.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத்திறனற்ற, திறமையற்ற அரசாக உள்ளது. 500 டாஸ்மாக் கடையை நாங்கள் மூடி உள்ளோம் என்று அரசு கூறி வருகிறது. எடப்பாடியார் தொடர் போராட்டத்தை நடத்தியால்தான் மூடப்பட்டுள்ளன. அதுவும் கூட விற்பனை இல்லாத சாலையோரக் கடையை தான் மூடி உள்ளனர்.

சமீபத்தில் இலங்கை கல்பிட்டி பகுதியில் போதைப்பொருள் பிடிபட்டபோது அதில் மூன்று கிலோ கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் என்ற போதைபொருள் இருந்தது இதை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய  ஏழு பேர் இலங்கை சேர்ந்தவர்கள் ஒருவர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தது என்று தெரியவந்தது. சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து போதை பொருள் கடத்தல் நடந்திருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவாகும். 

குறிப்பாக தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருள் பாதிப்படைந்துள்ளனர். போதை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் பூஜ்யமாக உள்ளது.

 அது மட்டுமல்ல  தமிழகத்தில் 5,500 டாஸ்மாக் பார்கள் உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மது பாட்டில் விற்பனை ஆகின்றது. கூடுதலாக பத்து ரூபாய் கட்டணம் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி அரசின் கஜானாவுக்கு போகாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது .

 தமிழக வரலாற்றில் இவரை நடக்காத வண்ணம் அமைச்சரை கைது செய்யப் பட்டுள்ளார். இலாக இல்லாத அமைச்சர் ஒரு கைதியாக இருப்பது வரலாற்றில் புதிதாக உள்ளது.  

இளைய சமுதாயத்தை அரசு காப்பாற்ற முடியாது இளைஞர்கள் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் சுனாமி பேரலையாக உள்ளது. இதற்கு ஒரு உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிக்கும் நிலையில் மக்களை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பீகார் சென்றார். இனிமேலாவது மக்களை பாதுகாக்கும்  நடவடிக்கையில் முதலமைச்சர்  ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால் நிச்சயம் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவார். தமிழகத்தை போதை பொருட்கள் இல்லாத நாடாக உருவாக்கி இளைஞர்களை பாதுகாப்பார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *