• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓடும் ரயில் அருகே போஸ் கொடுத்த மாணவன்..பதைபதைக்கும் வீடியோ

ByA.Tamilselvan

Sep 6, 2022

சமூக வலைத்தளங்களில் வெளியிட ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்த மாணவர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அக்‌ஷய் ராஜ் (17). ப்ளஸ் 2 படித்து வந்த இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர். இந்த நிலையில் ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று உள்ளார். ஆனால் வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது ரயில்வே தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அகஷய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அக்‌ஷய் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.