• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கனடா நாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் தெரு…

Byகாயத்ரி

Aug 29, 2022

முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல படங்களுக்கு சிறப்பாக இசையமைத்த இவர் 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடா நாட்டில் உள்ள மர்காம் நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு ‘ஏ.ஆர் ரஹ்மான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு மேயர் அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிறது. இதனையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ளார்.

அதில் “கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. மேலும் மார்கம் மேயர், கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா நாட்டு மக்கள் ஆகியோருக்கு நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ” என நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.இதே போல், கடந்த 2013-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு ‘அல்லா-ரக்கா ரஹ்மான்’ என்ற பெயர் வைேக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.