புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் ராஜகுளம் அருள்மிகு கன்னியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 29 நம் தேதி விமர்சையாக தொடங்கியது.
இதனை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான நேற்று சப்த கன்னிகளில் வீதி உலா நடைபெற்றது. இதில் குழந்தை பாக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை, கடன் தொல்லை தீர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வேண்டிக் கொண்டவர்கள், பூ பழம் உள்ளிட்ட 50 வகையான பழ வகைகள் காய்கறிகள் மற்றும் நவதானிய பொருட்களைக் கொண்டு சீர்வரிசை எடுத்து சப்த கன்னிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
இதில் ஊரே திரண்டு சீர்வரிசை எடுத்து சப்த கன்னிகளுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.