• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

ByA.Tamilselvan

Oct 23, 2022

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி 27ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..- தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25-ந்தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும். தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 27-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.