• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மன்னன் சாலிவாகனனுக்கு சிலை! குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம்..,

Byகுமார்

Oct 3, 2023

மன்னன் சாலிவாகனனுக்கு சிலை அமைத்திட வேண்டி தமிழ்நாடு அரசுக்கு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்..,

மதுரை அருகே சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு குலாலர் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் கண்ணன் மாணிக்வாசகம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் சீனிவாசன், பாலமுருகன்,அஜய்வேளார் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர் விழா பேருரை ஆற்றினார்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர்செய்திகளிடம் கூறியது குலாலர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மன்னன் சாலிவாகனனுக்கு சிலை அமைத்திட வேண்டும் எனவும்இந்த மாநாட்டில் பல்வேறு பிரிவுகளாக உள்ள சமூக மக்கள் அனைவரும் குலாளர் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும். அதேபோல் மண்பாண்ட தொழில் செய்வதற்கு தேவையான மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குலாலர்சமுதாய மக்களுக்கென்று
மண்பாண்டதொழிலாளர் நல வாரியம் அமைத்திட வேண்டும் .
குலாலர் சமுதாய இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து வரவுள்ள நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்திற்கு உதவி செய்யக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.