

சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக சீமான் பேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் தனது வாய்கொழுப்பை திமுகவிடம் வைத்துக்கொள்ளட்டும். எங்களிடம் வேண்டாம். இல்லை என்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
