• Wed. Jun 26th, 2024

குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைப்பு

Byவிஷா

May 25, 2024

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததாக கூறி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் கேடென்ஸ் மருத்துவமனை உள்ளது. முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக பாலின நிர்ணயம் மற்றும் கருக்கலைப்பு மற்றும் மனநல சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனர். விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவச் சட்டம் 1997ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் ஏற்கனவே சுகாதாரத் துறைக்கு ரகசியமாக வந்திருந்தாலும், மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பரிசோதனை செய்துவிட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை உரிமையாளர் களத்தூர் ரவியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தன் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *