• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

சுற்றுச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி…

ByKalamegam Viswanathan

Nov 30, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி அருகிலேயே மழை நீர் வடிகால் கால்வாய் செல்லும் நிலையில் தொடர் மழை பெய்து வரும் தற்போதைய சூழலில் கால்வாயில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளியின் மீதி உள்ள சுற்றுச்சுவர் மேலும் சேதமடையும் நிலையில் இருப்பதாகவும் மழைநீர் கால்வாய் செல்லும் பகுதியில் சுற்றுசுவரர் இல்லாமல் ஆபத்தான நிலையில் பள்ளி வளாகம் இருப்பதாகவும் மாணவிகள் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகையால் மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மழை நீர் செல்லும் பகுதியில் திறந்த வெளியாக உள்ள வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.

மற்ற பகுதிகளும் சேதம் அடையாதவாரு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.