• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விசிக கொடி கம்பத்தை அகற்றியதற்கு வருவாய் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Aug 6, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததாக கூறப்படும் விசிக கொடிக்கம்பத்திற்கு அருகே புதிய தமிழகம் கட்சியினர் சார்பில் புதிதாக கொடி கம்பம் அமைக்கப்பட்டு திறக்க ஏற்பாடு செய்த நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சர்ச்சைக்குரிய இரு கொடிக்கம்பங்களையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது விசிக-வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் விசிகவினரை கைது செய்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொடிக்கம்பத்தை அகற்றினர்.
வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரின் இந்த அராஜக செயலை கண்டித்து வாடிப்பட்டி காவல் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் விசிக சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது வருவாய் துறை மற்றும் காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் மற்றும் முழக்கங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில்
200க்கும் மேற்பட்ட வீசிகவினர் கலந்து கொண்டனர்.