• Tue. Dec 10th, 2024

30 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Jul 24, 2023

சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் 1994 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.இவ்விழாவில் பள்ளிதாளாளர் அருட்தந்தை பால்பிரிட்டோ தலைமை தாங்கினார்.முன்னாள் மாணவர்கள் கிரி,ஐயப்பன்,ரங்கன்,ராஜேஷ், முஜிபூரரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் முத்து வரவேற்றார்.முன்னாள் ஆசிரியர்கள்,இந்நாள் ஆசிரியர்கள் ஆகியோர் பேசினார்கள். இவர்களுக்கு இந்த ஆண்டு பள்ளியில் சிறந்த முறையில் மதிப்பெண்கள் பெற்ற மூன்று மாணவர்கள் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பிரபாகரன், மோகன்,மகேஸ்வரி, பஞ்சவர்ணம்,சித்ரா, காமிலா பானுஆகியோர் சால்வை அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தனர். முன்னாள் மாணவர்களுக்கு ஆசிரியை செலின் நினைவு பரிசு வழங்கினார் வடிவேல் தற்போதைய தலைமை ஆசிரியை ஜெயராணி ஏற்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தினர். விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.