சாத்தூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவில் வாழும் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருந்திடலில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தலைமையில் கிளைக்கழக நிர்வாகிகள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்நத சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி செய்து இருந்தார்.
உடன் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




