எகிப்தில், கைதி ஒருவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போனை முழுங்கியுள்ளார். இதனால் உடல்நல குறைவு ஏற்ப்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததில், செல்போனை அவர் விழுங்கி இருப்பதும், அதனால் அவரது உடல் உணவை ஏற்றுக்கொள்வதை செல்போன் தடுத்துள்ளது என்றும், இதனால் வயிறு மற்றும் குடலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டிருப்பதாக சோதனைகள் மற்றும் ஸ்கேன் முடிவுகள் காட்டின. அவரது உயிரைக் காப்பாற்ற உடனடி அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் செல்போனை வயிற்றில் இருந்து அகற்றினர்.
பின்னர், மருத்துவ குழுவினர் செல்போனை போலீசில் ஒப்படைத்தனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)