• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தகாத உறவு காரணமாக ஒருவர் கொலை!!

BySubeshchandrabose

Aug 28, 2025

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன்( சுமார் 63) இவர் பேருந்து நிலையம் எதிரில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மகன் பாலமுருகன் வயது சுமார் 37 இவர் போடிநாயக்கனூர் நாயக்கன்பட்டி அருகில் உள்ள கீரை கடை வீதியில் வசித்து வருகிறார். இவரும் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரும் போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஆண்டி வேல் வயது சுமார் 43. இவர் கிடைத்த வேலையை செய்து கொண்டு வந்துள்ளார்.

அவ்வப்போது சில சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு சென்று வந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கொலை செய்யப்பட்ட ஆண்டி வேல் கரட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவர் காலம் ஆகி விடவே அவரது தங்கை உறவான ஆனந்த ராணி என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனால் ஆண்டிகள் மற்றும் ஆனந்த ராணி உறவினர்கள் கரட்டுப்பட்டி கிராம மக்கள் இவர்களை ஊரை விட்டு ஒதுக்கிய நிலையில்.

இருவரும் போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கீரை கடை மார்க்கெட் சுள்ளக்கரை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக குடும்ப நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆண்டி வேல் கற்பழிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஆனந்த ராணிக்கு தற்போது ஆண்டி வேலை கொலை செய்த குற்றவாளி பாலமுருகனுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஒன்றாக இணைந்து குடும்ப நடத்தி வந்துள்ளனர்.

இருவரும் தம்பதிகளாகவே வாழ்ந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த ஆண்டி வேல் அவரது மனைவி பாலமுருகன் குடும்பம் நடத்தி வருவதை தெரிந்து ஜீவா நகரில் உள்ள பாலமுருகன் தந்தை நடராஜன் வீட்டில் சென்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

ஆண்டி வேல் அடிக்கடி பாலமுருகன் வீட்டிற்கு வந்து தகராறு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் ஆண்டி வேல் நடராஜனது வீட்டில் சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போதுதான் பழக்கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடராஜன் தமது வீட்டிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டி வேல் நடராஜனும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து நிலையில் ஆத்திரமடைந்த ஆண்டிவேல் பழ வண்டியில் வைத்திருந்த இரும்பு சேரை எடுத்து நடராஜனது மண்டையில் தாக்கி காயம் அடைந்த நிலையில் நடராஜன் தனது மகன் பாலமுருகனுக்கு போன் செய்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரத்துடன் வந்த பாலமுருகன் ஆண்டிவேலிடம் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில் கத்தியை எடுத்து ஆண்டி வேலை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படுகாயம் அடைந்த ஆண்டி வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போடி சரக துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையிலான காவல்துறையினர் காயமடைந்த நடராஜனை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ஆண்டி வேல் உடலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்த பாலமுருகனை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் தொடர்பு வைத்து குடும்பம் நடத்தி வந்த பெண்ணுடன் மற்றொருவர் இணைந்து குடும்பம் நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.