• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது.., மொத்த விற்பனையாருக்கு காவல்துறை வலைவீச்சு…

ByKalamegam Viswanathan

Dec 15, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது .

இதையடுத்து இராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்ப்பதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் DSP தனிப்படை காவலர்கள் பாலகிருஷ்ணன், துரைமுத்து, மதன், ஆகியோர் கம்மாபட்டிக்கு சென்ற போது நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் இறைவன் வயது 43 சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இறைவனை பிடித்து விசாரனை செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸ் சார் இவருக்கு மொத்தமாக கஞ்சா விற்றது யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து மொத்த விற்பனையாளையும் தேடி வருகின்றனர்.