மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ்., பட்டதாரி இளைஞரான இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.,

தான் காதலித்து வந்த காதலியுடன் பிரசன்ன வெங்கடேஷ்-க்கு வரும் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது., இந்நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது டிஇஎல்சி பள்ளி அருகில் எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது.,
இதில் பிரசன்ன வெங்கடேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்., தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
5 தினங்களில் திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,






