• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jul 7, 2022
Corona virus

இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாட்டின் புதிய துணை வகையான பிஏ.2.75 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது:- கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தையதைவிட மிகவும் வித்தியாசமாகத் தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படும். நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். வைரஸூக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தொடரும். அதனால், மக்களும் சமூகங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.