• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ள புதிய கப்பல்..,

ByR. Vijay

Oct 15, 2025

சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது,

நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறையிடையே இருமார்க்கத்திலும் கடந்த ஒராண்டில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் கப்பலில் பயணித்துள்ளனர். நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகப்பட்டினம் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் பருவநிலை மாற்றம் ஏற்படும். கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது. எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது. கடந்த 30 ஆண்டுகளின் காலநிலை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடப்பாண்டில் நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.