• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

ByA.Tamilselvan

Oct 20, 2022

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.