• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஜெயிலுக்கு பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..,

ByVelmurugan .M

Jan 24, 2026

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னாறு எறையூர் அருகே காவல்துறை வேன் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளை காளி என்ற நபரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எறையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டை வீசி அந்த ரவுடியை கொல்ல முயன்றது.

நாட்டு குண்டு வெடித்ததில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மருதபாண்டி, திருநெல்வேலி புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்குமார், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூன்று போலீசாரும் தீக்காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சி உதவியுடன் போலீசார் அடையாளம் காண தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப் பகலில் தேசிய தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த நாட்டு வெடிகுண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.