• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் பெரிய கடிகாரத்தை திருடும் மர்ம நபர்..,

ByP.Thangapandi

Dec 7, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகில் தோப்பு கருப்புசாமி கோவில் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.

காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள் ,நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து காணப்படும்.

இந்நிலையில் கோவில் பூசாரி வாரம் ஒரு முறை மட்டும் கோவிலுக்கு பூஜைக்கு வருவார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கோவில் பூசாரி ஆறுமுகம் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த போது கோவில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய கடிகாரம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோவிலில் வந்து பெரிய கடிகாரத்தை எடுத்து செல்வது தெரிய வந்தது. இது குறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.