• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை சமயநல்லூர் அருகே மினி வேன் தீப்பிடித்து எரிந்தது

ByKalamegam Viswanathan

Feb 1, 2024

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அட்டை லோடு ஏற்றி வந்த மினி வேன் தீப்பிடித்து எரிந்தது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகில் இரவு 10 மணிக்கு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அட்டை லோடு ஏற்றிக்கொண்டு மினி வேன் வந்தது.அதில் திடீரென்று எதிர்பாராத விதமாக முன்பகுதியில் தீப்பொறி உருவானது. உடனே அந்த வேனில் இருந்த டிரைவர் இறங்கி கீழே இருந்த மண்ணை எடுத்து அணைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை அதற்குள் தீ.மளமள என்று எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குநேரில் வந்து விசாரணை செய்தனர். சோழவந்தான் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சமயநல்லூர் அருகே அட்டைப்பெட்டி ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.