
தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவிண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 155 மாணவிகளுக்கு உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
