• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,

BySeenu

Apr 10, 2026

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சூரிய பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் துடியலூர் அருகே வடமதுரையில் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் கிழக்கு பகுதி, பகுதி கழக செயலாளர் வரவேற்றுப்பேசினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்ரமணியன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மூலனூர்கார்த்தி, மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ ரவி, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, பி வி மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து பேசிய வேட்பாளர் சூரிய பிரகாஷ் கூட்டணி கட்சியினர் தீவிரமாக உழைத்து தன்னை வெற்றிபெறச் செய்து தமிழக முதல்வராக மு க ஸ்டாலினை இரண்டாவது முறையாக பதவி ஏற்க உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பேசும்போது காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷிற்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என்றார். மேலும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலம்மைச்சர் ஆனதும் கோவைக்கு வரும்போது அவரை நேரில் சந்திக்க ஏற்பட்டு செய்யப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட். விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ் டி பி ஐ, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், BLA-2 , BDA, BLC நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் வட்டக் கழக செயலாளர் தமிழ்நிதி நன்றி கூறினார்.