நிலக்கோட்டை அருகே 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல், நிலக்கோட்டை, வீருவீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரின் மகன்கள் 2 பேர், தம்பி மகன் ஒருவர் ஆகிய 3 பேருக்கு பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக அரசு பேருந்து நடத்துனரான நிலக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து, கரூரை சேர்ந்த குமார் உள்ளிட்ட சிலர் பல்வேறு தவணைகளாக ரூ.36.10 லட்சத்தை பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமல் தலைமுறைவானார்கள்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்து, குமார், அவரது மனைவி பூமகள், உறவினர் சுசித்ரா ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கரூரை சேர்ந்த கவுரிசங்கரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.








