• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா?

ByKalamegam Viswanathan

May 30, 2025

கடந்த 4 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை திமுக நடத்திவருகிறது.ஆனால் திமுக ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திமுக அரசை குறை சொல்லி அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டு இருக்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

எடப்பாடியார் ஜனநாயக கடமை ஆற்றும் வகையில், மக்கள் மீது அக்கறையிலேயே மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, கேள்விக்
கணைகளை ராமன் வில்லில் இருந்து புறப்படுகிற அம்பை போல இன்றைக்கு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்று உழைத்துக் கொண்டிருக்கிற எடப்பாடியார். எடப்பாடியாரின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

கோரிக்கைகளை நிறைவேறாததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்லுகிற மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் உங்கள் அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாரோ உங்களுக்கு தப்பும் தவறுமாக தகவல்களை கொடுத்திருக்கிறார்கள்.

உங்களுடைய அயலக அணியை சேர்ந்த ஜாபர்சேட் போதை பொருள் கடத்தியதால், போதை பொருள் கடத்தி அதன் மூலம் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்று மக்கள் கூறுகிறார்கள். பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதை பார்த்து இந்த அரசின் அலங்கோல அரசுக்கு அரக்கோணமே சாட்சி என்று மக்கள் புலம்புவது உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா?

நீட் தேர்வு ரத்து என்று சொன்னதை மறந்து விட்டு நீங்கள் அமைதியாக கடந்து போவதை மக்கள் துயரத்தோடு கண்ணீரோடு உள்ளார்களே?

நீங்கள் உயர்த்திய மின்சார கட்டணதால் மக்கள் துன்பப்படுகிறார்கள், துயரப் படுகிறார்கள் நீங்கள் உயர்த்திய சொத்து வரியினாலே மக்கள் துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்களே இதையெல்லாம் யாரும் உங்களிடத்தில் சொல்லவில்லையா? பால்விலை உயர்வு, பத்திர பதிவு உயர்வு இப்படி பல்வேறு வரி உயர்வினாலே மக்கள் துன்பப்படுவதை உங்களிடத்திலே யாரும் சொல்லவில்லையா? அல்லது இவர்களெல்லாம் உங்களை பாராட்டுகிறார்களா?

இன்றைக்கும் மதுரையே அலுவலப்பட்டுக் கொண்டிருக்கிறது 10 தொகுதியில் இருக்கிற மதுரை மக்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதை திசை திருப்புகிற, மடை மாற்றம் செய்கிற வகையில் தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியை என்பதை போல ஒரு ஆடம்பர, ஆர்ப்பாட்ட விழாவை மதுரையிலே கடந்த ஒரு வாரமாக, இன்றைக்கு ரோடு ஷோ என்கிற பெயரில் இந்த அலங்கோலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

பொதுக்குழு நடத்துவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. அது கட்சியின் அடிப்படையிலே உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் நடத்துற அந்த கட்சி கூட்டத்திற்காக மக்களின் உரிமை பறிப்பது நியாயம் தானா?

முதல்வர் எந்த சாலையிலே செல்கிறாரோ அந்த சாலை மட்டும் பளீச் ,பளிச்சாக தயார் செய்யப்படுகிறது,ஆனால் மக்கள் பயன்படுத்துகிற நடமாடுகிற அந்த சாலைகள் எல்லாம் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா? வாக்களித்த மக்களுக்கு எல்லாம் குண்டும், குழியுமான சாலையை பரிசாக தந்துவிட்டு, அந்த வாக்குகளை பெறுவதற்காக வருகிற முதலமைச்சர் சாலைகளை எல்லாம் விமான ஓடுதளம் போல பளீச்சாக என்று உள்ளது முதலமைச்சரை ஏமாற்றவா? மக்களை ஏமாற்றவா?

நிர்வாகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவரும் சமம். வாக்களித்த மக்களுக்கெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றவில்லை அது குறித்து யாரும் உங்களிடத்தில் சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது நீங்கள் மதுரையில் கூட்டத்தில் பங்கேற்க வருகிற போது அவசர கதியில் பட்டா வழங்குகிறோம் என்று தேடிப் பார்த்தார்கள் ஆனால் அவசர கதியில் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த விழா ரத்து என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.

மக்களுக்காக திட்டமா?அல்லது திட்டங்களுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? அல்லது அரசுக்காக மக்களா? மக்களுக்காக மந்திரிகளா? அல்லது மந்திரிகளுக்காக மக்களா என்கிற கேள்வி மதுரையில் இருந்து எழுகிறது.

இவ்வளவு ஆடம்பர ஆர்ப்பாட்டம் பிரம்மாண்டங்களை இதுவரை பார்த்ததில்லை இந்த ஆர்ப்பாட்டம்,ஆரவாரம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை

மதுரைக்கு எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் எய்ம்ஸ் மருத்துவமனை,லோயர் கேம்பில் இருந்து குடிநீர் திட்டம்,சுற்றுச்சாலை திட்டம், 1000கோடியில் பறக்கும் பாலம், மதுரை ராஜாஜி மருத்துவமனை தரத்தை மேம்படுத்தி மல்டி மருத்துவமனை உருவாக்கம் புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம், புதிய கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வைகை ரையோர சாலையில் பாலங்கள், திருமங்கலம் கொல்லம் நான்கு வழி சாலை, மதுரை தூத்துக்குடி எக்கனாமிக் காலிடர் இதுபோன்ற மதுரை மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.

ஆனால் முதலமைச்சர் வீர விளையாட்டான ஜல்லிகட்டை விளம்பர விளையாட்டக மாற்றியதோடு அதை காட்சி பொருளாக கண்காட்சி விளையாட்டாக மாற்றியது ஒரு சாதனை.இன்றைக்கு தன் தந்தையார் பேரிலே நூலகம் அமைத்து அது ஒரு சாதனை,

இந்த சட்டசபையில் தொடரில் ஸ்டாலின் கூறுகிறார் கலைஞர் இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு என்றும், ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை என்று சொல்லுவார் என்று சொன்னார் அதை நினைக்கிற போது தமிழக மக்கள் சிரிப்பதா? அழுவதா என்று தெரியவில்லை .

இன்றைக்கு தமிழ்நாடு தான் இந்தியாவில் அதிக கடன் வாங்கி இருக்கிற சாதனை, தமிழ்நாடு தான் போதை பொருள் நடமாட்டத்தின் கேந்திரமாக இருக்கிற சாதனை, தமிழ்நாடு தான் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிற மாநிலம் என்கிற சாதனை, தமிழ்நாடு மின்சார கட்டணத்தில் வரி உயர்விலே பின்தங்கி இருக்கிற சாதனை,

ஆகவே வேதனைகளை எல்லாம் ஸ்டாலின் சாதனை என்று மாற்றிக் கொள்வது யார் பேச்சைக் கேட்டு அப்படி சொல்லுகிறார் என்று நமக்கு தெரியவில்லை உண்மை நிலவரம் இதுதான். மதுரை திமுக ஆட்சியில் பின்தங்கி சென்று விட்டது என்று மக்களே கூறுகிறார்கள்

மதுரைக்கு வரும் ஸ்டாலின் மதுரை, தூத்துக்குடி எக்கனாமிக் காரிடார் சாலையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு முன் வருவாரா?

கடந்த சட்டசபை தேர்தலில் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என திமுக வாக்குறுத்தியை கொடுத்துவிட்டு, நான்காண்டு ஆகியும் எந்த மதுக்கடைகளும் குறைக்கப்படவில்லை என்ற விவரம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது.

நாளுக்கு, நாள் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன மது கஞ்சா போதையை காரணம் என்றாலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக குற்றங்கள் கூடுகின்றன என சட்ட அமைச்சரும், டிஜிபியும் கூறி குற்றத்தை நியாயபடுத்தி மடைமாற்றம் செய்கிறார்கள்.

தமிழகத்தில் இனி பூரண மதுவிலக்கு அமலாக வாய்ப்பில்லை என அரசு கருதும் பட்சத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து சில முக்கிய நகரங்களில் மட்டுமாவது டாஸ்மாக் இல்லாத நகரங்களாக அறிவிக்கலாமே என்கிற யோசனை மக்களிடத்திலிருந்து வருகிறது.

எடப்பாடியாரு ஆட்சியில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் தமிழக முழுவதும் சிறப்பாக நடைபெற்றது இனியாவது சாலை வசதிகளில் இந்த அரசு கவனம் செலுத்த முன்வருமா? என்று கேட்கப்படுகிறது. போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பல சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுகிறது.

மதுரைக்கு வரும் முதலமைச்சர் மதுரை மக்களுக்காக கவனம் செலுத்துவாரா அல்லது எப்போதும் போல கைகாட்டி விட்டு கைகழுவி விட்டு செல்வாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.