• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

“பொன்விழா ஆண்டை முன்னிட்டு ” நிர்வாகிகள் தேர்வு.,

ByKalamegam Viswanathan

May 29, 2025

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில் “பொன்விழா ஆண்டை முன்னிட்டு “ புதிய கல்வி நிர்வாக குழுவின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கல்வி நிறுவனத் தேர்தல் மகா சபைக் கூட்டத்துக்கு கல்லூரியின் தலைவர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார்.

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்தலில் தேர்தல் அதிகாரியாக வழக்குரைஞர் கே.கோகுல் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார். கல்வி நிறுவன செயற்குழு உறுப்பினர்கள் 102 பேரின் விவரங்களை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.பின்னர், ஆட்சிக்குழுஉறுப் பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் பி.அசோகன், விஜயராகவன் சுந்தர்ராஜன் ஸ்ரீதர் பெருமாள்சாமி, வேணுகோபால், கி.இந்திராகாந்தி, ஆர்.ரெங்கராஜ், வி.கிருஷ்ணமூர்த்தி பெருமாள் சாமி ரவீந்திரன் விஸ்வநாதன் நாராயணசாமி, கணேசன், சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் 24 பேர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, கல்லூரியின் தலைவராக எம்.விஜயராகவன், துணைத் தலைவராக ஆர். ஜெயராம், செயலராக எஸ்.ஆர்.ஸ்ரீதர், உதவிச் செயலராக என்.சு ரேந்திரன், பொருளாளராக ஏ.ஆழ்வார்சாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் அனைவரும் (2025-2028) நிகழாண்டு முதல் வருகிற 2028- ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பர். புதிய நிர்வாகிக ளுக்கு கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவ லர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.