• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Feb 25, 2026

அரியலூர் அண்ணா சிலை அருகே ,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு,மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம் பிரபு வரவேற்றார்.

கூட்டத்திற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ஏ. வடிவேல் முருகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் கே கனக சபாபதி,பி பழனிச்சாமி,எஸ் செந்தில்குமார்,தங்க கோபிநாதன்,இரா முனியமுத்து, ஈ இளவழகன்,சிஜி ராஜேந்திரன்,ஜி வெங்கடாசலம்,ஏ சௌந்தர்ராஜன்,ஜெயங்கொண்டம் நகர செயலாளர்ஏ முரளி,பேரூர் கழக செயலாளர்கள் எஸ்.ஹூமாயூன் பாட்ஷா, ஏ பால்ராஜ் உள்ளிட்டோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் எம் கோமுகி மணியன், மாநில அமைப்பு செயலாளர் பொறியாளர் க. புகழேந்தி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் எம் ஆர் சேதுராமன்,மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ்,மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் எஸ் ராஜ்குமார்,மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி உதயகுமார்,தலைமை கழக பேச்சாளர் தங்க நாராயணசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, திமுக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி,வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என சூளுரைத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஆப்டிகல்ஸ் வி ரவிச்சந்திரன், மாவட்டஇணைச் செயலாளர் ஆர் பொன்முடி மாவட்ட துணை செயலாளர்கள் பி பழனிவேல்,கே சங்கீதா மாவட்ட பொருளாளர் சி பிரசாத்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி ரமேஷ் குமார் ஏ. திருக்குமரன், சார்பு அணி நிர்வாகிகள் எம் விஜயகுமார் கோ. விஜயகுமார் கே மல்லிகா பி கார்த்திகேயர், சி சத்யா ,பழ. சுதாகர், சி தமிழரசன், எஸ் தேவதாஸ்,எம் .கார்க்கி,கே கரும்பாயிரம்,பி கருணாநிதி,ஜெ. சமரசம்,பி சக்கரபாணி வி சரவணன்,பி சுலோசனா,எல் மோகன் குமார், ஈ சித்ரா,ஆர் துரைசாமி,டி கே சண்முகம்,ஆர் பாலசுப்பிரமணியன்,சி கார்த்திக்,வி சோழவேந்தன்,கே சந்திரசேகரன், பாஜக நகர தலைவர் அனிதா , உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய ,நகர, கிளை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் அரியலூர் நகர செயலாளர் வழக்கறிஞர் கே கமலக்கண்ணன் நன்றி கூறினார்.