• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரதமர் பேரணி நடக்கும் இடத்துக்கு அருகே பரங்கர வெடிசத்தம்

ByA.Tamilselvan

Apr 24, 2022

பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், அங்குப் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. காஷ்மீரும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. , ஆளுநரே அங்கு அரசியல் ரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாகக் காஷ்மீர் செல்கிறார், இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு அருகே சம்பாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெறும் இடத்திலிருந்துமிக அருகேயுள்ள வயல்வெளியில் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த வெடி சத்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் .அதில் பயங்கரவாத தாக்குதல் போலத் தெரியவில்லை என்றும் எதிர்பாராத வகையில் நடந்த விபத்தாகவே தெரிவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.