• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்பு

ByAlaguraja Palanichamy

Jun 30, 2022

சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் (exoplanet or extrasolar planet) எனப்படும்.
1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒத்த எக்ஸோபிளானட்கள் தேடல் ஆனது மிகவும் வேகமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது..!
முன்பு போல் இல்லாது, தற்போது மிகவும் சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் ஆப்டிக்கல் தொலைநோக்கிகள் (radio and optical telescopes) விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. உடன், பல விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்கள் (Space probes) சூரிய குடும்பத்தை தாண்டி சென்ற பின்பும் கூட நமக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.அப்படியாக கண்டுப்பிடிக்கப்பட்ட – பூமி கிரகம் போன்றே இருக்கும். எக்ஸோபிளானட்களில் அரை டஜன் கிரகங்கள் மட்டுமே அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு திரவ நீர் வழியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள கிரகங்கள் ஆகும்.
இதுபோன்ற தேடலின் போது பல வியத்தகு கிரகங்களும் கூட வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விசித்திரம் தான் – கேன்ஸ்ரி 55 இ (Cancri 55 e).சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும். குறிப்பாக, கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் வியப்பான கலவையானது (eerie composition) அதை ஒரு நரகம் போல் காட்சிப்படுத்துகிறது என்கின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.
கேன்ஸ்ரி 55 இ கிரகத்திற்கு இரண்டு முகங்கள் அல்லது இரண்டு அரைக்கோளம் (two faces or hemispheres) உள்ளது. கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு ‘முகம்’ ஆனது கொதிக்கும் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டிருக்கிறது மற்றொரு முகமானது நிரந்திர இருளான நிலையில் (perpetual state of darkness) இருக்கிறது.

சமீபத்திய வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகவும் புதிரான கிரகங்களில் கேன்ஸ்ரி 55 இ கிரகமும் ஒன்றாகும்


கேன்ஸ்ரி 55 இ கிரகத்தின் ஒரு பகுதியானது சுமார் 2,000 டிகிரி செல்சியஸ் உயர் வெப்பநிலையில் உள்ளது. அது மட்டுமின்றி அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் நொடியில் உயிரைப் பறிக்கும் விஷ வாயுவான ஹைட்ரஜன் சயனைடுதனை (Hydrogen Cyanide) வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
செவ்வாய் போன்ற உயிர் வாழத் தகுதியில்லாத கிரகங்கள் பல இருப்பினும், பைபிள் விவிலிய விளக்கங்களின் படி நரகம் ஆனது இப்படித்தான் இருக்கும் என்பதை ஒற்று இருக்கிறது கேன்ஸ்ரி 55 இ..!
பூமி கிரகம் முழுக்க ஆங்காங்கே எரிமலை ஆறுகள் மற்றும் பெரிய பெரிய மாக்மா குளங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தால் அப்படிதான் இருக்கும் கேன்ஸ்ரி 55 இ.
அது மட்டுமின்றி கேன்ஸ்ரி 55 இ, பூமி கிரகத்தை விட இரண்டு மடங்கு பெரிய அளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியால் (Spitzer Space Telescope) கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, இந்த கிரகத்தில் முதல் வெப்பநிலை வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமுடன் அழகுராஜா பழனிச்சாமி


கேன்ஸ்ரி 55 இ கிரகம் ஆனது ஒரு குண்டு வெடிப்பு அல்லது உள்வெடிப்பு நிகழ்ந்ததற்கு சமமான அளவிற்கு வலுவான கதிர்வீச்சை வெளியிடுகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விண்வெளியில் இது போன்ற ஒரு விசித்திரமான மற்றும் படுபயங்கரமான ஒரு கிரகப்பொருள் இருக்கவே முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள், அதனால் தான் இதை நரகம் என்று குறிப்பிடுகின்றனர்.
உலகில் நாம் வாழும் போது பல இலட்ச மயில்களுக்கு அப்பால் இருந்து வெளிவரும் சூரியனின் தாக்கத்தை மனிதர்கள் மற்றும் உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தாங்க முடியவில்லை என்றால், நேரடியாக நரகத்தின் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை நினைவுப் படுத்தவே ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களை பின்வரும் செய்தியாக சொல்கிறார்கள்.உலகில் எங்களால் வெப்பத்தின் தாக்கத்தையும்,தாங்க முடியாது. குளிரின் தாக்கத்தையும் எங்களால் தாங்க முடியாது. எனவே வெப்பமும், குளிரும், நரகத்தின் நினைவை கொண்டு வரவேண்டும்.


ஆகையால் உலகத்தில் வாழும் மனித இனங்கள் மற்றும் அனைத்து வகையான உயிரினங்கள் பாதுகாக்க, ஒவ்வொரு வீடுகளிலும், காடுகளிலும் அதிகப்படியான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும், ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும். என்று அரசும், வனத்துறையும் தெளிவுபடுத்தி உள்ளது இதுதான் மனித இனத்தையும் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களை வாழ வழி வகை செய்யும். மும்மாரி மழை பொழியும் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் வேளாண்மை குடிகள் விவசாயம் செய்து பஞ்சம், பட்டினி இறப்புகளை தவிர்த்து வழிவகை செய்ய இந்தியாவிலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய / குடிமகனும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் இது தான் நரகத்தில் நம்மை காப்பத்தி கொள்வதற்கு இதுவே சான்று என்று ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்ட உண்மை. உண்மை கடலிலும் பெரிது.

புவியியல்,பேராசிரியர். முதுமுனைவர்.

அழகுராஜா பழனிச்சாமி, காலநிலை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர்