• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எளிய முறையில் ராஜினாமா கடிதம் கொடுத்த உயர் அதிகாரி

Byவிஷா

Dec 23, 2023

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர், தனது மகனின் நோட் புக் பேப்பரில் எளிய முறையில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்த விவரம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் மிட்ஷி இந்தியா லிமிட். இது காகிதம், பிளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களையும், உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 19 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் ரிங்கு பட்டேல் என்பவர் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சொந்த காரணத்திற்காக அந்த நிறுவனத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்காக ஒரு ராஜினாமா கடிதத்தை தனது கைப்பட எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ராஜினாமா கடிதம் கடந்த மாதம் 15-ம் தேதி எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதற்காக அந்த ராஜினாமா கடிதம் வைரல் ஆகிறது ஏனெனில் , தனது மகனின் நோட்புக்கிலுள்ள பேப்பரை பயன்படுத்தி எளிமையான முறையில் ராஜினாமா கடிதத்தை எழுதி, அதனை போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். அந்த ராஜினாமா கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் ராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.