• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கையில் பிளேடால் எழுதி “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகர்

ByA.Tamilselvan

Oct 21, 2022

விபரீத முறையில் “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“துணிவு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது .இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது. அஜித் – சமுத்திரகனி இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் “துணிவு”. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


இந்நிலையில், விபரீத முறையில் “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் “துணிவு” படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை வீடியோ எடுத்து புதுச்சேரி அஜித் ரசிகர்கள் மட்டும் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.