திருப்பூர் மாவட்டம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை . இந்நிலையில் இன்று காலை முதல் நாய் ஒன்று அவசர சிகிச்சை பிரிவை மட்டுமே சுற்றி சுற்றி வந்தது .

அப்போது அங்குள்ளவர்கள் இந்த நாயை பற்றி விசாரிக்கையில் இன்று காலை காளிவேலம்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்த ஒருவர் இன்று பல்லடம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு நாயுடன் வந்ததாகவும் பின்னர் நாயை இங்கேயே விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இந்த நாய் தனது உரிமையாளருக்காக இன்று காலை 7 முதல் தற்பொழுது வரை காத்திருந்து வருகிறது. மேலும் அங்கிருந்தவர்கள் நாய்க்கு உணவு அளித்தனர். தன்னை விட்டுச் சென்ற தனது உரிமையாளருக்காக சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக அரசு மருத்துவமனையிலேயே காத்திருந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது .