மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கரகாட்டகலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பயண மேலாளர் ஷியாம் குமார் மற்றும் மத்திய தொழிற்பது ஆப்பு படை வீரர்கள் தீயணையப்பு வீரர்கள் , இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஸ்ரீலங்கன் விமான நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலைய வளாகம் முழுவதும் கரும்பு மாவிலை வாழை மரம் தோரம் கட்டி விழா கொண்டாடப்பட்டது.

விமான நிலைய வளாகத்தில் கரகாட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை விமான நிலைய வளாகத்தில் டெல்லியில் இருந்து வந்த குல்திப், ஸ்வருப் அனில் குமார் குடும்பத்தினர் மேள தாள இசைக்கு வைப்பாக ஆடினர்.
இதனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அவர்களை கலை குழுவினருடன் ஆட அழைத்தனர்.
டெல்லி குல்தீப் குடும்பத்தினர் கரகாட்ட குழுவினருடன் வந்து கலக்கலாக நடனமாடி பார்வையாளர்களை அசத்தி பரவசப்படுத்தினர்.




