
கோவை மாவட்டம் காரமடை குட்டையூர் கிராமத்தில் மீட்கப்பட்ட 65 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் விதைக்கப்பட்ட பயிர்களை இன்று அறுவடை செய்யும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சமூக சமத்துவப் படை தலைவர் டாக்டர் ஸ்ரீ சிவகாமி ஐஏஎஸ் கலந்துகொண்டு பஞ்சமி நிலத்தில் விதைக்கப்பட்ட தானிய பயிர்களை அறுவடை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராஜன், அமைப்பு செயலாளர் குடடையூர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் புரட்சி பாலு, தொழிற்சங்க தலைவர் அறிவொளி பாலு மற்றும் பஞ்சமி நிலத்தின் பயனாளிகள் கலந்து கொண்டனர். நிலத்தின் உரிமை குறித்து தோழர் சிவகாமி அவர்கள் மக்களிடம் உரையாடினார். பஞ்சமி நிலத்தில் விளைந்த பூக்களையும் தானியங்களையும் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தனர்.
