• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு

ByKalamegam Viswanathan

Feb 21, 2023

பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை பசுமாடு ஈன்ற அரிதான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகாளை. இவர் விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறார். இவரின் ஆறு வயது பசுமாடு மூன்றாவது முறையாக சினையாக இருந்தது. நேற்று இரவு இந்த பசுமாடு இரண்டு காளை கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளது. பொதுவாக பசுமாடு ஒரே ஒரு கன்றை மட்டுமே ஈனும். ஒரே சமயத்தில் இரண்டு கன்றுகளை பிரசவத்தில் ஈன்றுவது மிகவும் அரிதானது. பசுவையும், இரண்டு கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.