• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்

Byதரணி

Nov 13, 2022

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனை கூட்டம்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக வாக்காளர் சேர்ப்பு பணி குறித்து ஆலோசனைக்கூட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர்கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசினார். வாக்காளர் பட்டியலை அதிமுக நிர்வாகிகளிடம் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி பேசும்போது, கடந்த 2 நாட்களாக வாக்காளர் சேர்ப்பது குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாம் இந்த மாத கடைசியில் 26, 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. தங்கள் பகுதியில் உள்ள 17 வயது பூர்த்தியடைந்தவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். விடுபட்டுள்ள வாக்காளர்கள் பெயர்களை சேருங்கள். வெளியூர் மாறுதலானவர்கள், காலமானவர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்களை நீக்கம் செய்யுங்கள். தற்போது உள்ள வாக்காளர்கள் பெயர்கள் உள்ளதா எனவும் சரி பாருங்கள்,வாக்காளர்கள் சேர்க்கும்போது ஆதார் அட்டை ஜெராக்ஸ் இணைக்கவும். கூட்டத்திற்கு வந்துள்ள நகர ஒன்றிய, பேரூர்க ழகத்தினர் கிளை வாரியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தகவல் தெரிவித்து வாக்காளர்கள் சேர்க்கும் முகாமில் அதிகப்படியான வாக்காளர்களை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார். சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், கருப்பசாமி, சிவகாசி மண்டல செயலாளர்கள் , சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாமி(எ)ராஜஅபினேஷ்வரன், முன்னாள் நகர செயலாளர் அசன்பதூரூதீன், விருதுநகர் நகர செயலாளர் முகமதுநெய்னார், விருதுநகர் தகவல் தொழில்நுட்ப அணி நகர செயலாளர் பாசறை சரவணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், திருத்தங்கல் கூட்டுறவு வங்கிதலைவர் ரமணா, சிவகாசி ஒனறிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி. ஒன்றிய கழக இணை செயலாளர் இளநீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கார்த்திக், பால்ராஜ், தங்கபாண்டி, அழகர் குமார், அம்மா பேரவை குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கெண்டனர்.