• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரையில் முதல்வர் தலைமையில் தெண்மண்டல அளவிலான தொழில் நிறுவனங்களின் மாநாடு

ByA.Tamilselvan

Sep 16, 2022

மதுரையில் தெண்மண்டல அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாடு மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.


இந்த மாநாட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, தொழில்முனைவோர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார், தொடர்ந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிவான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கிய முதலமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளுக்கு தமிழ்நாடு அரசு விருதுகளையும் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வங்கிக்கடனுக்கான சொத்துப்பிணைய உரிமைப்பத்திரம் பதிவு செய்திட ஆன்லைன் வசதி திட்டத்தை தொடங்கிவைத்து, குறுந்தொழில் குழுமம் அமைப்பதற்கான ஆணைகளை வழங்கினார், இதேபோன்று சிட்கோ நிறுவனத்திள் ஆன்லைன் சேவைகள் தொடங்கிவைத்த பின்னர் கோவிட் பெருத்தொற்றால் பாதிக்கப்பட்டு, வங்கிகளில் கடன் பெற முடியாமல் தவிக்கும் தகுதியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கேர் (CARE) – “தொழில்முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்” என்கின்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்து அதன் அடையாளமாக முதல் பயனாளிக்கு 1.80 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை கடனாக வழங்கினார்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும் பள்ளிகல்வித்துறையும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க திட்டத்தை தொடங்கிவைத்து அதன் லோகோவை வெளியிட்டதோடு , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டார்.


இதனை தொடர்ந்து நான்காம் தலைமுறை தொழில் நுட்பத்திற்கு (Industry 4.0) குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயார்படுத்திக் கொள்ள பயிற்சி வழங்குவதற்காக இண்டோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் FaMe TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பத்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தபி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர்,வங்கி உயர் அலுவலர்கள், TANSTIA உள்ளிட்ட அனைத்து தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.