• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில் செல்வராஜ் அம்பலம், கருப்பணன் அம்பலம் நினைவு கையுந்த போட்டி நடைபெற்றது

ByN.Ravi

Mar 14, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்ணனம்பட்டியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் அம்பலம், மற்றும் ராஜேந்திரன் என்ற கருப்பண்ணன் அம்பலம், நினைவாக கையுந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியினை, ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் சன் செல்வராஜ், தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தர்மராஜா, முன்னிலை வகித்தார்.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். முடிவில், கோபி பிரண்ட்ஸ் கொடைக்கானல் அணியினர் முதல் பரிசையும், பாலமேடு விக்கி நினைவுக் குழு இரண்டாவது பரிசையும்,
தட்டிச் சென்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட பொதுச் செயலாளர் பெருமாள் , அலங்கை வடக்கு மண்டலத் தலைவர் தங்கதுரை, தெற்கு மண்டலத் தலைவர் இருளப்பன், தொழிலதிபர் எஸ்.டி.எம். செந்தில்குமார், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், சாத்தையாறு அணை பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ், மற்றும் தேவசேரி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமணி என்ற சசி, பாலமேடு விஜயகுமார், விளையாட்டுப் போட்டியின் நடுவர்கள் பிரபு, மதன் சக்தி, பாலா, ஜெயக்குமார் மற்றும் அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.