• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காதலிப்பதில் போட்டி! கொலையில் முடிந்தது!

ByRadhakrishnan Thangaraj

Jun 16, 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் வயது 33. இவரும் இவர் தந்தை முத்துச்சாமியும் மைக் செட் போட்டு தொழில் செய்து வருகின்றனர்.

இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் இவர் வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பாலம் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை செய்து தப்பி ஓடி விட்டனர். . இந்த தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஸினா பீவி, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என தீவிரமாக விசாரணை செய்தனர். வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக் பாபு தலைமையில் தனி படை அமைத்து இரவோடு இரவாக மூன்று நபர்களை பிடித்து கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேரும் ஒரே பைக்கில் கடந்த ஒரு வார காலமாக அதிவேகமாக சுற்றி வந்ததும் தனியாக இவரை பார்த்து கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டி வந்ததும் தெரிய வந்தது ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக சோலை ராஜுக்கும் இவர்களுக்கும் இடையே போட்டி இருந்ததாகவும் இதன் காரணமாக திட்டமிட்டு இந்த கொலையை செய்ததும் தெரிய வந்தது.

மலையடிப்பட்டி காமராஜர்புரத்தை சேர்ந்த முத்துலிங்கம் வயது 22, அதே தெருவை சேர்ந்த கருப்பசாமி பாண்டி 17, கோதை நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் சாமி வயது 23 ஓவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும் கொலைக்கான வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.