• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

நட்சத்திரங்களோடு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது சில படங்களில் கதநாயகனாக நடித்து வருகிறார். அப்படி யோகி பாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது.

இந்தப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்க, அன்கா மீடியாவின் முதல் படைப்பாக தயாராகிறது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான சயின்ஸ் ஃபிக்‌ஷ்ன் ஜானரில் உருவாகிறது. யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படங்களில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லலாம். இந்தப் படம் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாகவுள்ளது. படத்திற்காக கொடைக்கானலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம் படத்தின் தொடக்கவிழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, சக்திவேல், சி.வி குமார், நடிகர் சிபி சத்யராஜ், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

 

செய்தியாளர் -சிந்து