• Sun. Apr 28th, 2024

பாலியல் புகார் வழக்கில் விசிக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!

Byவிஷா

Oct 30, 2023

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பட்டியலின உரிமைகள் ஆர்வலராகிய பெண் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செய்தி தொடர்பாளர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், சாதி உணர்ச்சி, பாலியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் துஷ்பிரோயகம் செய்ததாகவும் கூறிய அப்பெண் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், விக்ரமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மே 2 அன்று, வி.சி.கே துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா உட்பட 5 பேர் கொண்ட உள் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் வாக்குமூலம் பதிவு செய்து, 20 நாட்களுக்குள் அறிக்கையை திருமாவளவனிடம் சமர்ப்பிக்கும்படி, குழுவுக்கு உத்தரவிட்டது. ஆனால் விசாரணைக்கு பிறகு எந்த அறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது விக்ரமன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மன உளச்சளுக்கு ஆளானார். அதன்பிறகு விசிக கட்சியை நம்பி இனி ஒரு பயனும் இல்லை என்று, சென்னை போலீஸ் கமிஷனரை அணுகி, ஜூலை 20ம் தேதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், புகார்தாரர் பலமுறை கோரிக்கை விடுத்தும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்காததால் கடைசியாக சிறப்பு நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் விக்ரமன் மீது ஐபிசி பிரிவு 406 (நம்பிக்கை துரோகத்திற்கான தண்டனை), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல்), 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 499 (அவதூறு), 500 (அவதூறு தண்டனை), 506 (1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ) மற்றும் 506 (2) (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை); தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66ஏ (தகவல்தொடர்பு சேவை, முதலியன மூலம் புண்படுத்தும் செய்திகளை அனுப்புவதற்கான தண்டனை), 66இ (தனியுரிமை மீறலுக்கான தண்டனை) மற்றும் 67 (மின்னணு வடிவில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவதற்கு அல்லது அனுப்புவதற்கான தண்டனை); குற்றச்செயல்களுக்கான தண்டனைகள் தொடர்பான எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள்; மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 (பெண்ணை துன்புறுத்துவதற்கான தண்டனை) என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *